சேவைத் தேவைப்பாடுகளுக்காக எம்மிடம் வரும் நீங்கள் உரிய தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்து உரிய மாதிரிப்படிவங்களை சரியாகப் பூர்த்தி செய்து எம்மிடம் ஒப்படைத்ததன் பின்னர் இங்கு கீழே குறிப்பிடப்பட்டு உள்ள காலப்பகுதியில் தங்களது தேவைப்பாட்டினை நிறைவேற்றித் தருவதற்கு கட்டுப்பட்டு உள்ளோம்.

தாபனப் பிரிவு

1.வதிவுச் சான்றிதழ் உட்பட கடிதங்கள், ஆவணங்களுக்கு  மேலொப்பம் இடல். 04 நிமிடங்கள்

கணக்குகள் பிரிவு

1.விதவைகள் அநாதைகள் ஓய்வூதியம் செலுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் 01 நாள்
2.வாகனங்களுக்கான அனுமதிப்பத்திரங்களை வழங்குதல் 05 நிமிடங்கள்

காணிப் பிரிவு

1.காணிகளைக் கையுதிர்த்தல் 03 மாதங்கள்
2.அடுத்து வருபவரைப் பெயரிடுதல் / பதிலீட்டாளரைப் பெயரிடுதல் 01 வாரம்
3.மூல உரித்தினைப் பெயரிடுதல் 10 நாட்கள்
4.வாழ்நாள் உரித்தினைப் பெயரிடுதல் 02 வாரங்கள்
5.வங்கியில் பிணையாக வைத்தல் 01 மாதம்

சமூக அபிவிருத்திப் பிரிவு

1.வருமானச் சான்றிதழ்களை வழங்குதல் 10 நிமிடங்கள்
2.விலங்குகளை கொண்டு செய்வதற்கான அனுமதிப்பத்திரங்களை வழங்குதல் 10 மணித்தியாலம்
3.70 வருடங்களைப் பூர்த்தி செய்த முதியோர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்குதல் 30 நிமிடங்கள்
4.பொதுமக்கள் உதவிப்பணம் / நோய்களுக்கான உதவிப்பணம் என்பவற்றினை வழங்குதல் (ஒதுக்கீடுகள் இருப்பின்)

01 வாரம்

5.இயற்கை அனர்த்தம் ஒன்று ஏற்படும்போது வீடுகளை அமைப்பதற்காக உதவிப்பணம் கோரல் (ஒதுக்கீடுகள் இருப்பின்) 02 வாரங்கள்
6.ஜனாதிபதி நிதியுதவி 03 நாட்கள்
7.மஹபொல புலமைப்பரிசில் மற்றும் மாணவர் உதவிப் பணத்தொகை என்பவற்றிற்கான பரிந்துரைகளை வழங்குதல் 10 நிமிடங்கள்
8.சுயாதீன சங்கங்களைப் பதிவு செய்தல் 01 வாரம்
9.வியாபாரப் பெயர்களைப் பதிவு செய்தல்   08 நாட்கள்
10.வியாபாரப் பெயர்களில் திருத்தங்களை மேற்கொள்ளல் 06 நாட்கள்

அடையாள அட்டைகள் பிரிவு

1.தேசிய அடையாள அட்டைகளை வழங்குதல்
     (அ) ஒரு நாள் சேவைகள் 10 நிமிடங்கள்
     (ஆ) பொதுவான சேவைகள் 01 நாள்

மேலதிக மாவட்டப் பதிவாளர் பிரிவு

1.பிறப்பு / விவாக / இறப்பு சான்றிதழ்களை வழங்குதல்
     அ). சான்றிதழின் இலக்கம் இருக்கும் சந்தர்ப்பத்தில் ; 05 நிமிடங்கள்
     ஆ). சான்றிதழ் இலக்கம் இல்லாமல், திகதி உள்ளவிடத்து ; 01 மணித்தியாலம்
     இ). சான்றிதழின் இலக்கம் ,திகதி என்பன இல்லாதவிடத்து ; 03 நாட்கள்
2. பிறப்புச் சான்றிதழ் ஒன்றில் பெயர்களைத் திருத்தும்போது 02 வாரங்கள்
3.தோட்ட  பிறப்புக்கள் / இறப்புக்கள் என்பவற்றினைப் பதிவு செய்தல் 02 நாட்கள்
4.காலங் கடந்த பிறப்புக்கள் மற்றும் இறப்புக்களைப் பதிவுசெய்தல் 02 வாரங்கள்
5.“ஆ” பிரிவின் கீழ் பிறப்புச் சான்றிதழ் ஒன்றில் தந்தையின்  தகவல்களில் மாற்றங்களை  மேற்கொள்ளல் 01 மாதம்
6.2 (1) பிரிவின் கீழ் பிறப்புச் சான்றிதழ் ஒன்றில் தாயின் தகவல்களில் மாற்றங்களை மேற்கொள்ளல் 01 மாதம்
7.விவாகங்களைப் பதிவு செய்தல் 01 மணித்தியாலம்

சமூர்த்திப் பிரிவு

1.சமூர்த்தி கட்டாய சேமிப்புக்களின் பணத்தை விடுவித்தல் (இலங்கை வங்கி)

03 நாட்கள்
2.சமூர்த்தி சமூக பாதுகாப்பு பயன் தொகையினைச் செலுத்துதல் 04 நாட்கள்

News & Events

23
அக்2025
Procument Notice

Procument Notice

Procurement notice regarding the construction of 14...

குடியுரிமை சாசனம்

Scroll To Top