எமது நோக்கு மற்றும் எங்களின் செயற்பணி

VM

அறிமுகம்

மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தில் கங்க இஹல,பஸ்பாகே,உடுநுவர,தொலுவ ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளையும் நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை பிரதேச செயலாளர் பிரிவினையும் எல்லைகளாகக்கொண்ட  உடபலாத்த பிரதேச செயலாளர் பிரிவு, 79.4 சதுர கிலோ மீற்றர்கள் விஸ்தீரணத்தில் பரவிக்  காணப்படுகின்றது.

நிருவாக செயற்பாடுகளுக்கு இலகுவாகும் வகையில் மேற்படி பிரிவானது,  49 கிராம அலுவலர் பிரிவுகளாக பிரித்து வேறாக்கப்பட்டு உள்ளதுடன் மேற்படி கிராம அலுவலர் பிரிவுகளுக்கு  201 கிராமங்கள் உரித்தாகுகின்றன. மொத்தக் குடும்பங்களின் எண்ணிக்கை 26127 ஆவதுடன் மொத்த சனத்தொகை 110569 ஆகும். உள்ளூராட்சி நிறுவனங்கள், நகர சபை,பிரதேச சபை என்ற வகையில் பிரித்து வேறாக்கப்பட்டு உள்ளது.

மாவட்டத்தின் பிரதான நகரமாகிய கண்டியிலிருந்து 13 மைல்கள் தென் மேற்குத் திசையில்  அமைந்துள்ள மேற்படி பிரிவின் ஊடாக கண்டி தொடக்கம் நுவரெலியா வரையும்,கண்டி தொடக்கம் ஹட்டன் வரையும் செல்லும் பிரதான வீதியும் கொழும்பு தொடக்கம் கண்டி ஊடாக பதுளை வரை செல்லும் புகையிரதப் பாதையும் செல்கின்றன.

புவியியல் பண்புகள்

பிரதேசத்தின் உயரம் கடல் மட்டத்தில் இருந்து 1500 அடிகள் தொடக்கம் 5500 அடிகள் வரையில் மாறுபடும் உயரத்தினைக்கொண்ட மலைகள், மேட்டு நிலங்கள் ,ஆற்றுப் பள்ளத்தாக்குகள் மற்றும் தாழ்நிலங்கள் என்பவற்றுடனான கலந்த புவியியல் உருவ அமைப்புக்களைக் கொண்டுள்ளதுடன், மேற்படி பிரதேசத்தின் ஊடாக மகாவலி நதியும் பாய்ந்து செல்கின்றது. இதற்கு மேலதிகமாக புஸ்ஸெல்லாவ ஓயா, அட்டபாகே ஓயா என்பனவும், மகாவலி நதியுடன் கலக்கின்றன.மேற்படி பிரிவினை ஒட்டு மொத்தமாக நோக்கின் மலைப் பிரதேசங்களிலும் தாழ் நிலங்களிலும் நீரூற்றுக்கள் குறைவின்றிக் காணப்படுகின்றன.

காலநிலை

இலங்கையின் காலநிலை வலயங்களுக்கு ஏற்ப பார்க்கும்போது மத்திய நாட்டு ஈர வலயத்திற்கு உரித்தாகும் உடபலாத்த பிரதேச செயலாளர் பிரிவின், புஸ்ஸெல்லாவ மலைகளினால் கிழக்குத் திசையில் பரந்து செல்லும் பகுதி குளிர் காலநிலை வலயத்திற்குரிய பண்புகளைக் கொண்டது.சராசரி வெப்பநிலை 18-24 பாகை செல்சியஸ் இற்கு இடைப்பட்டதாகும். பிரதேசங்களுக்கு இடையிலான வெப்பநிலை மாற்றங்கள்  மிகவும் பிரதான வகையில் தென்படுவதுடன் அது 15-30 பாகை செல்சியஸ் வரை நிலவுகின்றது.பிரதேசத்தின் மழைவீழ்ச்சி 2000 – 5000 மில்லி மீற்றர்களுக்கு இடைப்பட்டதாகக் காணப்படுவதுடன் ஆண்டு பூராகவும் வட கிழக்கு மற்றும் தென் மேற்கு  மொன்சூன் மூலமும் இடைக்கால மொன்சூன் மற்றும் உகைப்பு மழை என்பவற்றின் மூலமும் மழை கிடைக்கப் பெறுவதுடன் ஈர வலயப் பண்புகளையும் கொண்டுள்ளது.

வடிகாலமைப்பு முறை

பிரதேசத்தின் கிட்டத்தட்ட 75% வரை  மகாவலி கங்கை மற்றும் கிளை ஆறுகளின் நீரினால் போசிக்கப்படுகின்றது. நிலக்கீழ் நீர் மற்றும் சிறு நீரோடைகள் என்பனவும் இதற்குத் துணை புரிகின்றன.

இயற்கைத் தாவரங்கள்

பாரிய வகையில் பரவிக் காணப்படும் காட்டுப் பிரதேசம் இங்கு காணப்படுவதில்லை எனினும் ஈர வலயத்திற்குரிய இயற்கைத் தாவரங்கள் கூடியளவில் இங்கு காணப்படுகின்றன. அம்புளுவாவ,தொரகல,புஸ்ஸெல்லாவ,துனுகேஉல்ல போன்ற உயரம் கூடிய பிரதேசங்களில் காடுகள் பரவிக் காணப்படுகின்றன. அதற்கு மேலதிகமாக தேயிலைத் தோட்டங்களைச் சார்ந்த வகையில் நீரேந்து பிரதேசங்களாக குறிப்பிட்டளவு காட்டுப் பிரதேசங்கள் காணப்படுகின்றன.

உடபலாத்த பிரதேச செயலாளர் பிரிவின் வரலாற்றுப் பின்னணி

நியங்கம்பாய என்ற இடத்தில்  காணப்பட்ட ஏழு மாடிக் கட்டிடம் (உட+ பல+ ஹத) காரணமாகவே “உடபலாத்த”  என்ற பெயரில் மேற்படி பிரதேசம் அழைக்கப்பட்டது என  மரபுவழிக் கதைகளில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

அதற்கமைய விஜயனின் வருகைக்கு முன்னர் இருந்தே இலங்கை அரசாட்சிக்கு உட்பட்ட நாடு ஒன்றாகக் காணப்பட்டது.பல்வேறு காலப்பகுதிகளில் காலத்தின் தேவைப்பாட்டிற்கு ஏற்ப அநுராதபுரம், பொலன்னறுவை, தம்பதெனிய, யாப்பஹுவ ஆகிய நகரங்களில் ராசதானிகள் தோற்றம் பெற்றன. பல்வேறு காரணங்களின் அடிப்படையில் அவ்வாறு தாபிக்கப்பட்ட  இராசதானிகள் ஏனைய பிரதேசங்களுக்கு இடம்பெயர்ந்தன. அதற்கு அமைய குருணாகல் யுகத்திற்குப் பின்னர் கம்பளை இராசதானி தோற்றம் பெற்றது. பிரதேசத்தின் அமைவிடம் அரசு ஒன்றினைத் தாபிப்பதற்குரிய பாதுகாப்பு மற்றும் ஏனைய பௌதீகக் காரணங்களின் அடிப்படையில் பொருத்தமாகக் காணப்பட்டமையினால் திரிசங்களாதீஷ்வர எனப் புகழ்பெற்ற 4 ஆவது புவனேகபாகு  அரசன் கம்பளை  இராசதானியினைப் பிரகடனப்படுத்தி அபிஷேகம் பெற்றார். அதன் பின்னர் கோட்டை நகரிற்கு இராசதானி இடம்பெயரும் வரை  அரை நூற்றாண்டு காலப்பகுதிக்கும் அதிகமான காலப்பகுதி அரசர்கள் நான்கு பேருக்கு கம்பளை இராசதானியாகக் காணப்பட்டது.

தற்கால உடபலாத்த பிரதேச செயலாளர் பிரிவு கி.பி.1341 தொடக்கம் 1415 வரை நிலவிய கங்கசிரிபுர (கம்பளை) இராசதானி காலத்தில் தலைநகராகக் காணப்பட்ட கங்கா சிரிபுரயின் பெரும்பாலான பகுதிகளை உள்ளடக்கி இருந்தது  என்பது நகரைச் சுற்றிக் காணப்பட்ட காவற் கணவாய்களின் மூலம் உறுதிப்படுத்தப்படுகின்றது. கலுவாஹல்கட ,பொரலுமங்கட (தற்போதும் கூட அப்பெயர் பாவனையில் உள்ளது) ஆடியாகடவத (மகாவலி கங்கையின் அக்கரை இக்கரை பிரதேசமாகும்) காவல் அரண் (கம்பளை தொடக்கம் கடுகன்னாவ வீதியின் வடதெணிய வீதியுடன் தொடர்புரும் இடமாகும்) அம்புளுவாவ,கெரடிஎல்ல,தெம்பிலிகல (மரு எல்ல என அழைக்கப்படும்) என்பன பழைய நகரின் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்பட்ட காவற் கணவாய்கள் ஆகும். இவற்றுள் கல்பாய மற்றும் கெரடிஎல்ல என்பன உடபலாத்த பிரதேச செயலாளர் பிரிவிற்கு வெளியே காணப்படுகின்றன. புராதன வரலாற்றுக் காலம் தொட்டு இப்பிரதேசத்தில் மக்கள் குடியேற்றங்கள் காணப்பட்டு வந்தமைக்கான சான்றுகள் உள்ளன. பேராதெணிய,புஸ்ஸெல்லாவ,கம்பளை,நாவலபிட்டிய,தொலஸ்பாகே ஆகிய பிரதேசங்களில் இருந்து கிடைக்கப் பெற்றுள்ள புராதன மற்றும் மத்திய காலங்களுக்கு உரிய கருவிகளின் மூலமும் அவ்வாறே அம்புளுவாவ பிரதேசத்தின் தென் பகுதியில் அமைந்துள்ள அலுகொல்ல கிராமத்தில் பரந்து காணப்படும் உருக்கிய உலோகக் கசடுகளுக்கு அமையவும்  மரபுவழிக் கதைகளுக்கு அமையவும் மேற்படி பிரதேசத்தில் புராதன கல்யுகம்,மத்தியகால கல் யுகம்,நவீன கல் யுகம்  என்பவற்றிற்கு உரித்தான இரும்பினைப் பயன்படுத்திய காலங்களுக்குரிய மக்கள் குடியிருப்பு நிலவியதாக உறுதிப்படுத்தப்படுகின்றது.  

உடபலாத்த பிரதேச செயலகத்தின் முன்னாள் பிரதேச செயலாளர்கள்

பிரதேச செயலாளரின் பெயர்    

தொடக்கம் வரை
 திரு.ஏ.எம்.ஆர்.பீ.அபேசிங்ஹ 1991  
 திரு.எச்.எம்.ஹேரத் அபேவீர 1994 1995
 திரு.எஸ்.வீரபாஹு 1995 1996
 திரு.பி.தர்மதாச 1996 1998
 திரு.ஆர்.எம்.டீ.பீ.மீகஸ்முல்ல 1998 2002
 திரு.பீ.எம்.நிமல் பாலசூரிய 2002 2012
 திரு.ரி.காமினி முணசிங்ஹ 2013 2014
 திரு.யூ.பி.இந்திக அநுருத்த பியதாச 2014 2017
 திருமதி.ஆர்.ஏ.டீ.ரி.என்.தென்னகோன்  2017  2023
 திருமதி ஏ. டி. ஜெயரத்னnbsp; 2023  தற்போது வரை

News & Events

23
அக்2025
Procument Notice

Procument Notice

Procurement notice regarding the construction of 14...

குடியுரிமை சாசனம்

Scroll To Top